தாயும் சேயும்
தன் உதிரத்தை பாலாய் கொடுத்தது
தாய்!
முதியோர் இல்லத்தை பரிசாய்க் கொடுத்தது
சேய்!
குழந்தைக்காய் துயில் மறந்தது
தாய்!
தன் சொகுசுக்காய் அன்பை மறந்தது
சேய்!
இவனுக்காய் தாலாட்டைக் கற்றது
தாய்!
தன் மனைவிக்காய் தாளம் போட்டது
சேய்!
இவன் நோயென்றால் அழுதிடுவாள்
தாய்!
தாயவள் பிணி கண்டு முகம் சுழித்திடும்
சேய்!
முதுமை நிலை குழந்தை நிலை
தாய்!
புரியவில்லை அதை அறியவில்லை
சேய்!
தாய்ப் பாடல் கேட்டவர் அழுவார்
பாரில்!
முதியோர் மனை அதிகரிக்குது இன்னும்
ஊரில்!
பெற்ற தாயின்றி நாமில்லை
உலகில்!
இவன் வாழ்வு தௌிவில்லை அவன்
மனதில்!
இந்நிலைக்காய் வருந்திடுவோர்
யார்?
இந் நிலை மாற்ற துணியவில்லை
ஏன்?