துகளும் தூணாய் - ஏமாறும் எந்திர துதிக்கை

உன் நெஞ்சத்தின் நேர்த்தியை
நிமிடம் எல்லாம் நினைத்து பார்

வாசல் மட்டும் வாழ்க்கையில்லை
வந்து பார் !
பூமி பந்து போதாது !!
பறந்து பார் !
வானம் உனை விடாது !!

வேலையில்லை என்பவனே
இல்லை என்பதே வாழ்க்கையா !
இப்படியே இருந்தால்
இல்லாமல் போகுமே
இதமான வாழ்க்கை!

நின்று கொண்டே
நிம்மதி கேட்டால்
நிச்சயம் கிடைக்காது !

இதோ
இடம் இருக்குது !
இதயம்
இன்னும் அடிப்பட !!


புயலை போல் - தொடங்கு
உன் செயலை !!

துரத்திய தோல்வியெல்லாம்
பார்வை பட்டு
பயந்து போக !!

சுலபம் என சொல்லி
முயற்சி மட்டும் பிடித்து பார் !!
தோல்வி பல தொட்ட - உனை
வெற்றி மட்டும் தேடும் பார் !!

உடைந்த
மனதின் ஒவ்வொரு
துகளும்
தூணாய் நின்றால்
எடுத்து வீச
எந்திர துதிக்கையும்
ஏமாந்து போகும் !!


---- வாழ்க்கை பயணம் நம்பிக்கை நடையுடன் ----

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (8-Feb-14, 1:14 am)
பார்வை : 397

மேலே