யார் கையில் இல்லை திருவோடு -- மணியன்

வறுமைக் கோடு
வகுத்திடும் கனவான்களே. .
கோட்டை நீங்கள் என்றாவது
எட்டி நின்று வருடியது உண்டா. . . .

ஏழைகள் சிரிக்கவே இல்லையே
எப்போது நீங்கள்
இறைவனை காண்பீர். . . .

நிலாவைக் காட்டி
உலா வரலாம் என்போரே. . .
விலா எலும்பில்
கலையை காண முடியுமா. . .

எடுத்து வைத்த எமக்கு
கொடுத்து வைக்க வில்லை. .
படுத்து விட்டதே பாரதம். . .

வாக்காளன் நாங்கள்
பூக்காடா கேட்டோம். .
சாக்காடு வளையம் வைத்தீர். . .

எப்பாடு பட்டேனும்
அப்பாடா என்று
தப்பாமல் கிழியுது தினசரி. . .

ஊழல் எனும் தீயில்
தணல் ஆகியது நாடு. .
புணரமைப்பது யாரோ. . .

இனி ஒரு விதி செய்ய
தனி ஒருவன் நிலை காக்க
கவி பாரதிதான் வரவேண்டுமா. . . .

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
வையத்தை அழிப்போம் என்று
அவனையே புலம்ப வைத்தீர். . .

பாருக்குள்ளே நல்ல நாடு
யார் கையில் இல்லை திருவோடு. . .
பிறக்க வேண்டும் புதிதாய் ஒருவன்
பிணி நீங்க புது தாயின் கருவோடு. . . .

எழுதியவர் : மல்லி மணியன் (8-Feb-14, 12:50 am)
பார்வை : 176

மேலே