சினிமா நிஜமா

வில்லை
வழைத்து விழுதுகளில்
இணைத்திடும் -நிஜம்
அறியா
முகவரிகள்..

கைபூசி
மண்பூசி கலை
மைபூசி நடனமாடும்
மங்கையர்களை
விலை
பேசும்
நாடக மேடை .

பொய் சிரிப்பு
நிஜமற்ற
குடும்ப
வாழ்க்கை ஒரு நாள்
கூத்து விடிந்தால்
ஆட்டம்
கலைந்திடுமே...!

இதை கண்டு
திறலான கூட்டம்
கை தட்டி மகிழ்கிறது
முடிவில்
கைசேதமும்
அடைகிறது...

பொழுது
போக்குகள் போக்கற்ற
வாழ்வை
எடுத்துக்காட்டும்
நிஜமற்ற கண்ணாடி
போன்றது
என உணரும்
உள்ளம்
எத்தனை.!

மகிழ்ச்சி
எனும் கயிறை
அறியாமல்
பற்றி பிடித்து வாழும்
உயிருக்கு
தூக்குக்கயிறு
துன்பம்
தரும் என
தெரியாமல்
போனதேனோ..!

காலமே நீதான்
தக்க பதில் தரவேண்டும்
அறியாமையில்
வாழும்
உயிருக்கு
நல் வாழ்வை
என்றுமே தந்திட
வேண்டும்

எழுதியவர் : லெத்தீப் (7-Feb-14, 10:26 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : sinimaa nijamaa
பார்வை : 56

மேலே