பாப்பாவுக்கு அறிவுரை
அன்னைக்கு உன்னால் பாப்பா-புது
இன்பம் பிறக்குது பாப்பா!
இன்றைக்கு நீதான பாப்பா-அவள்
உணர்வாய் ஆனாய் பாப்பா!
பொக்கைச் சிரிப்பில் பாப்பா-ஒரு
பூரிப்பு பிறக்குது பாப்பா
துக்கம் பறக்குது பாப்பா-புதுத்
தெம்பும் வருகுது பாப்பா!
பாட்டி தாத்தா பாப்பா -உனைப்
பார்த்து ரசிப்பார் பாப்பா!
காட்டும் கோலம் பாப்பா-பலர்
கண்ணைப் பறிக்கும் பாப்பா!
கண்டவர் எல்லாம் பாப்பா-உன்
கன்னம் தொடுவர் பாப்பா!
பண்பாய் வளர்ந்திடு பாப்பா -உனைப்
பார்த்து மகிழ்வார் பாப்பா!
வெள்ளை உள்ளம் பாப்பா-அதை
விரித்து வைத்திடு பாப்பா!
கொள்ளை அழகு பாப்பா-உன்
குடும்பம் சிறக்கும் பாப்பா!