பாரத நாடு
பாரத நாடிதை நாடு-இப்
பாரினில் உயர்ந்த நம்நாடு
பண்பினில் நின்றிடும் நாடு-அதன்
பெருமையை உணர்ந்திடும் நாடு.
அன்பினில் வாழ்ந்திடும் நாடு-நல்
அமைதியை விரும்பிடும் நாடு
அகிம்சை பிறந்த நாடு-தன்
அறிவால் வளர்ந்திடும் நாடு.
எண்ணத்தில் உயர்ந்த நாடு -ஒரு
எளிமை விரும்பிடும் நாடு
விண்ணையும் அளந்திடும் நாடு-உயர்
வீரத்தை விளைத்திடும் நாடு.
வன்முறை வெறுத்திடும் நாடு-நல்
வாழ்வினை விரும்பிடும் நாடு
நன்னெறி தவறா நாடு-பல
நன்மைகள் செய்திடும் நாடு.