நோயின்றி வாழ

காலையில் எழுந்திடு
காலார நடந்திடு
தூய்மைக் காற்றினை
நுகர்ந்து நீ வாழ்ந்திடு.

அக்கறை கொண்டிடு
அதிகாலை நடந்திடு
சர்க்கரை அளவினை
அளவுக்குள் வைத்திடு.

ஆத்திரம் விட்டிடு
அன்பினைப் பெருக்கிடு
மாத்திரை உண்பதை
மறந்திடப் பழகிடு.

சுத்தமாய் இருந்திடு
சுகந்தனைக் கண்டிடு
மொத்தமாய் உண்பதை
முடிவுக்குக் கொண்டிடு.

பசித்திடு புசித்திடு
அளவாய் சாப்பிடு
நசிந்திடும் நோயது
நன்றாய் வாழ்ந்திடு,

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Feb-14, 2:49 pm)
பார்வை : 110

மேலே