ஆணவம்

ஆணவம்
**************
அழிவுக்கு எழுதி வைக்கும்
அழியாத ஆவணம்--
முந்தி வந்து--சொந்தச்
சிந்தனைத் திறத்தினை
மறைக்கும் தோரணம்--
உறவுக்கும், நட்புக்கும்,
நகைக்கு தேய்மானம்--
தீராது தொடர்ந்து வரும்
தீமைகளுக்குக் காரணம்--
"எல்லாம் தெரியும்"
"என்னால்தான் முடியும்"
என்னும் சின்னத்தன
எண்ணத்தின் பாராயாணம்--
அகம்பாவம்மும் செருக்கும்
ஆணவமும் பேய்இனம்--

வேண்டாம் ஆணவம்--
ஆணவம் தீவனம்--
+++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : பேராசிரியர் (8-Feb-14, 3:21 pm)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 71

மேலே