மெட்டுப்பாடல்

மெட்டுப் பாடல்

பல்லவி

முத்து மண்டபமே !
முகஞ்சிவந்த மல்லிகையே !
முன்னுதட்டுப் புன்னகைக்கு விலையென்ன ?- நீ
மூடி மூடி வைத்திருக்கும் பொருளென்ன ?

தென்னையிளங் கனிகள் வந்து
தேகத்திலே குடிபுகுந்து
மோகத்திலே வாட்டுதடி என்னையே
என் கவிதைக்கு நான் கருவமைத்தேன் உன்னையே

காதலின் கீர்த்தனம்
காலமே அர்ப்பனம்
உன் காலடியில்
என் கவிதையெல்லாம் சமர்ப்பனம்
நீ…………………………..யில்லாமல் நானிங்கே நடைப்பிணம்

பொன் அந்தி நேரத்தில்
என் நெஞ்சின் ஈரத்தில்
நீ வருவாய் நான் காணும் கனவிலே
நீ வருவாய் நான் காணும் கனவிலே

பல்லவி

மாதமொரு பௌர்ணமியாய்
மாலை நேர சிறுமழையாய்
தென்றல் மகள் என்னைத் தேடி வரவேண்டும்
என் தேகம் தொட்டு கோடி சுகம் தர வேண்டும்

பல்லவி

எழுதியவர் : ராசைக் கவிபாலா (8-Feb-14, 5:49 pm)
பார்வை : 99

மேலே