ஓவென்றழுகுது மனம்

ஓவென்றழுகுது மனம்...
ஓங்காரமிடுது தினம்...

நிஜம் கரைந்து நிஜம் கரைந்து
நிழல் கூட
நிறம் மாறிப் போனது...

தினம் நினைந்து மனம் நனைந்து
கனவுகளும்
ரணமாகிப் போனது...

கருத்தரித்து, கண்களில்
கர்ப்பம் சுமந்து-
காலம் வரும் முன்னே
கண்ணீராய் உடைந்து போனது!

ஓங்காரமிடுது தினம்!
ஓவென்றழுகுது மனம்!

எழுதியவர் : மனோ & மனோ (8-Feb-14, 5:46 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
பார்வை : 229

மேலே