பறவையின் சிறை வாசம்

சிறை வாழ்க்கையை வெறுக்கும்
மானிடரே,

எம்மை சிறையில் அடைத்துப் அழகு
பார்க்கும் மானிடரே.

குற்றம் செய்தால் சிறை வாசம்
உங்கள் ஆனந்தம் எமது குற்றமா.

சுற்றம் நட்பு இல்லாமல்
தனிமை எம்மைக் கொள்கிறது.

உணர்ச்சி உள்ள மானிடரே
மற்றவர் உணர்ச்சியை மதியுங்கள்.

எம்மை பல நாள் காணாமல்
என் தாய் வடிக்கும் கண்ணீரால்,

உன் குடும்பம் சாபம் பெற்றிடுமே
அதை சற்றும் நீங்கள் உணர்ந்தீரா.

எம் பழக்க வழக்கம் நீர் அறிவீரா
எம் உணவு முறை தான் தெரிந்திடுமா.

எதுவும் முழுதாய் தெரியாமல்
பின் ஏன் இந்த விஷப்பரீட்சை.

எங்களைப் படைத்த ஆண்டவனே
உன்னிடம் முறையிட நாங்கள் வந்தோம்.

பறவை இனத்தை சேர்ந்த எங்களை
இப்படி தவிக்க விடலாமா.

எங்களைக் காப்பாய் நீ என்று
நாங்களும் அமைதியாய் இருக்கின்றோம்.

ஆறறிவு படைத்த மனிதரிடம்
இரக்க குணத்தை ஏன் வைக்க மறந்தாய்.

நீ செய்த குற்றத்தால்
நாங்கள் அவதிப் படுகின்றோம்.

விரைவில் நீயும் வந்துவிடு
இவர்களிடம் இருந்து எம்மை காத்துவிடு.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (8-Feb-14, 9:22 pm)
பார்வை : 59

மேலே