கவிதை
கவிதை ஒன்றும் வானத்து தேவதை அல்ல
மனதில் தோன்றும் எண்ணங்களின்....
சிறு குறிப்பு !
பரிதவிக்கும் மனிதருக்கு
ஆறுதலாய் மயிலிறகின் வருடல்....!
ஆழ்ந்து யோசித்தால் பிறக்கும் குழந்தை...!
உளிகளை பிடிக்கும் சிற்பி!
சமுதாயத்தை சீரமைக்கும்
துப்புரவு தொழிலாளி !
எண்ணங்களின் பல வண்ண கலவை !
பெண்ணினை நினைத்து சிலர்...
இயற்கையை புரட்டும் சிலர்...
சமுதாய சிந்தனையில் சிலர்...
சாக்கடை சீரமைக்கும் சிலர்...
நட்பு வட்டத்தில் சிலர் ...
தாய்மை உள்ளத்தில் சிலர்...
மதவாதத்தில் சிலர்...
மிதவாதத்தில் சிலர்...
கொலை பாதகத்தில் சிலர்...
அமைதி வேண்டியே அமைதி இன்றி
தவிப்பவர்கள் பலர்...!!
கவிதைகள் ஒன்றும் நதிகள்ளல்ல
வழிந்து ஓடிட ...
நீர் ஊற்று...
சில நேரம் அருவிகளாகும்...
சில நேரம் பெரும் கடலென உருவாகும்.
பொய்மையை உண்மையாக்குவது கவி!
உண்மை நிலைக்க உருவாக்கும் கவி!
உனக்குள்ளே இருக்கும் வரை நீர் ஊற்று!
உலகமே வியக்கும் போது பேரருவி...!!
புகழ் வந்து சங்கமிக்கும் தருணத்தில்
அமைதி காத்தால் கடலென உருவாகும் கவி !கவி !கவி !கவிஎன்பேன்