வேண்டா மழை
வேண்டா மழை
மழை நீரோடு
விழி நீர் கலந்ததனால்
ஏற்க மறுத்தாயோ - நிலமே
காற்று மழை
தள்ளி வந்தால் - பாது
காத்திருப்பேன் என் அகத்தை
கால நேரம்
காணாது வந்தாய்
காதலும் தள்ளிப்போன
என் மேல் விழ
ஒருமையாய் வறுமையில்
இறுகி நின்றேன்
புள்ளியிட்ட கூரைக்குள்ளே
புயலாய் நுழைந்தாய்
அவள் விட்டுச் சென்ற
ரோஜா இதழ்களை
நிலத்தில் அமிழ்த்தி
நீர் விட்டுச் சென்றாயோ
இன்னுமொருமுறை
வருமுன் எனக்கு - பண
வசதி கொடுத்து வா
கூரைகளுடன் காதலையும்
சரி செய்ய.