இல்லாமை

ஆண்ட்ராய்டு இல்லாத போது ஆடம்பரமப்பா அதெல்லாம் என்றேன்..
கார் வாங்க முடியாத போது காலுள்ளது எனக்கு என்றேன்...
நட்சத்திர விடுதியைப் பார்த்து அங்கு நடுநிசி போல இருட்டிருக்கும் என்றேன்..
மால்களின் கடைமுன் நின்று மாவோயிஸம் பேசினேன்..
விரும்பிய புத்தகத்தின் விலையைப் பார்த்தபோதுதான் இல்லாமையின் இருத்தல் என்னை இருக்கமாக நெருக்குகிறது....

எழுதியவர் : அங்கயற்கண்ணி (9-Feb-14, 3:37 pm)
Tanglish : illamai
பார்வை : 45

மேலே