நிதர்சனம்

பக்கத்து வீட்டாரின்
பாசப் பேச்சினை புறந்தள்ளி
படார் என்று கதவை சாத்தினேன்

ஜன்னல்களை மூடினேன்...
ஜதிகளை ஓட விட்டேன்...

வலைப் பக்கத்தை விரித்தேன்
வரிக்கு வரி எழுதுகிறேன்...

சகோதரத்துவம் ஓங்கிடவே
சமத்துவம் படைப்போம்...
சமுதாயம் நல்கிட
நட்பினை விரிப்போம்....

நட்பு அழைப்பு விடுக்கவே
தொலைத்து தூரத்து நட்பினை
தேடிக் கொண்டு இருக்கிறேன்...

வாசலில் பக்கத்து வீட்டுகாரரின்
அழைப்பு மணி தொல்லையோடு..

எழுதியவர் : கவிதை தாகம் (9-Feb-14, 3:37 pm)
Tanglish : nidarsanam
பார்வை : 51

மேலே