நிகரில்லா ஒரே படைப்பு இப்புவியில்

அண்டத்தின் ஆக்க சக்தியே பெண்...
சக்தியில்லையேல் சிவனில்லை என்றுணர்ந்து,
இறைவனே அர்த்தநாதீஸ்வரனாய் நிற்கிறான்...

இறைவனின் படைப்பில் கொஞ்சம் கவிநயமும் இயற்கையின் எழில்வளமும் கலந்ததொரு படைப்பாய் பெண்கள்...

தாய் என்னும் ஸ்தானத்தில்,
அன்பென்னும் ஒட்டுமொத்த உருவமே பெண்...

பெண்....!!!
புரியா ஒரு கவிதை...
புரிந்து பார்வைக்கு அறிந்த ஒரு அதிசயம்...

பெண்ணில்லையேல் புவியில்லை...
அப்பெண்கள் ஆண்களுக்கு என்றும் சளைத்தவளில்லை...

வலியினில் பெரியதாம் பிரசவ வலி பொறுத்து
பிள்ளையை ஈன்றேடுப்பவள் பெண்...
ஒவ்வொரு பிரசவமும்
இறந்து பிறந்து,
எடுக்கிறாள் மறுபிறவியை...

சங்ககாலம் தொடங்கி இன்றுவரை...
பெண்ணில்லா துறை எதுவோ...?
கூறுங்கள் இப்புவியில்...

கையில் வாளேந்தி போரிட்டால்
ஒரு புரட்சி பெண்...
கையில் சிலம்பேந்தி நீதிக்காக போரிட்டால்
ஒரு நீதி தேவதை...

நிலவிலும் கால் வைத்து சரித்திரத்தில்,
ஒரு மாற்றம் வைத்தாள்,
ஒரு சாதனை பெண்...

ஆளுமை திறன் கொண்டு ஆட்சி செய்த,
பல பெண்களை பார்த்த பூமி இது...
பாரதி கேட்டதும் ஒரு புதுமை பெண் தான்...

எவ்விதத்தில் குறைந்தனரோ புரியவில்லை...
பெண்ணெனும் சொல்லுக்கு நிகர் சொல்லுண்டொ இப்புவியில்...

பொறுமையில் சிறந்தவள்...
பண்பில் உயர்ந்தவள்...
குணத்தில் செல்வமிக்கவள்...
இப்புவியில் எல்லாவுமாய் இருப்பவள்..
பெண்ணல்லவா...!

மதித்திடு பெண் சமுகத்தை
அது உயர்த்திடும் நம் சமுதாயத்தை....!!!

எழுதியவர் : அரவிந்த் .C (9-Feb-14, 7:24 pm)
பார்வை : 218

மேலே