இயற்கை சொல்லும் பாடம்

இயற்கை சொல்லும் பாடம்.

ஒட்டிப்பிறந்த காய்களா?--இல்லை
விட்டுப்பிரிந்துப் பின்
ஒட்டிக்கொண்ட கைகளா?
விட்டதோ ஒட்டியதோ -இந்த
இந்தத் தொட்ட சொந்தம்
இனி இனிக்கட்டும்.

இயற்கை இவ்விதம் சிலநேரம்- இங்கு
மனிதம் பேச முனைவதுண்டு.
செயற்கையாய் சேர்ந்த சொந்தம் -என்றும்
சிரமத்துணை ஆவதில்லை.
இயற்கை சொல்லும் பாடங்களை
இனியேனும் கற்றுத் தேர்வோம்.

பொய்கள் உன்னை மயக்கும்போது-இயற்கை
மெய்கள் சொல்ல அதிசயங்களை
அங்கொன்றும் இங்கொன்றுமாக-உலகில்
அவ்வப்போது செய்வதுண்டு.
அறிவது அறிவாகும் என்றும்
அது நமக்குத் துணையாகும்.

பாசத்தையும் நினைவூட்டும்.--வரும்
மோசத்தையும் வினைகாட்டும்.
இயற்கை காட்டும் சீற்றங்களை-நமக்கு
எச்சரிக்கை என மதித்தால்
மிச்சமுள்ள காலமெல்லாம்
அச்சமின்றி வாழ்ந்திடலாம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (9-Feb-14, 8:16 pm)
பார்வை : 214

மேலே