மரணம்
கண்ணு நீர்
ஆற்று ஒழுக்கில் -
விடை அறியாப்
பயணத்தின்
படியிறங்கி
காடு செல்ல -
நினைவுகளைத்
தீயிலிட்டு
நெருங்கியவர்
திரும்பும் முன்னே -
கழுவி விட்ட கூடத்து நீரில்
அவர் மெல்ல
கரைந்து கொண்டிருந்தார் !
அடுத்த வேளை
உணவிற்கான
ஆயத்தங்கள் சுமந்து
வீடு முன்னோக்கி
நகர்ந்தது !