அம்மா

சிறுகதை

இயல்வது கரவேல்:

3 வயது

மகன்: அம்மா, கக்கா
அம்மா: பரவாயில்லடா ராஜா நீ கொழந்தை

10 வயது:

மகன்: அம்மா ஸ்கூல்ல திருடிட்டேன்
அம்மா: பரவாயில்லைடா நீ கொழந்தை

18 வயது:

மகன்: அம்மா என் பிரண்ட்ஸ் வரும்போது நீயும் வந்து வாயப் பாத்துகிட்டு நிக்காதே.
அம்மா: சரிப்பா, நான் வரமாட்டேன்

24 வயது:

மகன்: அம்மா, நான் அவளைத்தான் காதலிக்கிறேன், அவளைத்தான் கட்டுவேன்
அம்மா: சரிப்பா, உன் சந்தோஷம்தான் முக்கியம்

28 வயது:

மகன்: அம்மா அவ சின்னப் பொண்ணுதானே, நீதாம்மா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்

அம்மா: சரிப்பா

32 வயது:

மகன்: அம்மா வேறே வழியே இல்லை, தனிக் குடித்தனம் போகிறோம். டெய்லி உன்னை வந்து பார்த்துக்கிறேன்
அம்மா: பரவாயில்லைப்பா நீ சந்தோஷமா இருந்தா சரி

40 வயது:

மகன்: எங்கம்மா முடியுது? ஒரே வேலை...அடுத்த பொங்கலுக்கு ஊருக்கு வரேன்
அம்மா: பரவாயில்லைப்பா உடம்பை பார்த்துக்க, அடிக்கடி வந்து அலையாதே.

50 வயது:

மகன்: என்னால வர முடியலை. பணம் அனுப்புறேன். ஆஸ்பத்திரியில் சேர்ந்து விடு
அம்மா: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ப்பா. பணம் செலவு பண்ணாதே. வைத்தியர் கிட்டே சொல்லி சூரணம் சாப்பிட்டா சரியாப் போயிடும்.

55 வயது:

மகன்: ஐயோ, அம்மா! போயிட்டயே! நீ இருக்கும்போது உன்னை கவனிக்கவே இல்லையே! நான் பாவி.... நான் பாவி!

அம்மாவின் ஆவி: ராஜா... அழாதேப்பா.... எனக்கு விதி வந்து போச்சு அவ்வளவுதான்...

எழுதியவர் : முரளிதரன் (10-Feb-14, 9:29 am)
பார்வை : 217

மேலே