அரசியல் மிருகம்
மனிதன் ஒரு அரசியல் மிருகம்
எத்தனை சத்தியமான வார்த்தை
அனைத்திலும் அரசியல் புகுத்தும்
சகுனி குணம் இயற்கை கொடையோ
அறிவின் முடையோ....!
கூடி வாழ்வதற்கும்
கோஷ்டி சேர்ப்பதற்கும்
வேறுபாடு உண்டு
அனைத்திலும் அரசியல்
இணைந்து ஆனந்த கூத்தாடுவது
அரசியலின் சாதனை
பிற துறையின் சோதனை