என் அர்த்தங்கள் சில

பாசம், அன்பின் வெளிபாடு...
அன்பு, ஆதி மூலம்...
காதல், அதீத நம்பிக்கை...
காமம், உள்ளஉணர்ச்சியின் எல்லை...
தாய்மை, பெண்மையின் உச்சம்...
பிறப்பு, ஒரு புனித தொடக்கம்...
இறப்பு, குடி தந்து இடம்பெயர்தல்...
கோபம், குரங்கு கையில் பூமாலை...
சாந்தம், உயிரின் கடைசி நிலை...
பகை, வீண்பலன்...
நட்பு, எங்கும் பாதிபலம்...
சொந்தம், தள்ளிநிற்பது தின்னம்...
மரியாதை, மூத்தோர் அனுபவத்தை உணர்த்த...
அனுபவம், செயற்கல்வி...
புகழ், தலைக்குமேல் கத்தி...
தற்பெருமை, அர்ப்ப போதை...
ஆசை, தற்காலிக சந்தோஷம்...
நம்பிக்கை, நாடகமாக்கக்கூடாத உன்னதம்.!

எழுதியவர் : சூர்யா (10-Feb-14, 9:57 pm)
சேர்த்தது : சூர்யா பிரகாஷ்
பார்வை : 139

மேலே