நினைவுளை சீர்செய்வோம்
நினைவுகள் சிதறித் தெறித்ததில்
மனதின் ஒவ்வோரு துளிகளிலும்
நிகழ்ந்தவைகளின் தோற்றம்...
அலுவல்களின் துணை கொண்டு
மறக்க நினைத்தாலும் நினைவுகளின்
தோற்றங்களை அழிக்க முடிவதில்லை...
மறக்க நினைத்த ஞாபகங்களும்
மனப் பயிற்சியால் மறந்தவைகளும்
புயலாக வீசுகின்றன பலபொழுதுகளில்...
நிம்மதியின் நிலைமாறி சீர்கெட்டு
சிறந்த பொழுதுகளும் வீணாகும்
மாறாத மனதின் பதிவுகளால்
மனதிற்கு மென்மையையும் நிம்மதியும்
நிச்சயமாக கிடைக்கச் செய்யலாம்
பயனற்ற நினைவுகளைத் தவிர்த்தால்...
மகிழ்ச்சியுடனான நிம்மதியும் தொடர்ந்திருக்கும்
மகிழ்வான மனப் பதிவுகளை மட்டும்
நினைத்திருக்க சிறிது முயற்சி செய்தால்...

