அழுகை

இது அனைத்து உயிரனங்களின் ஆரம்பமொழி...
எம்மைக்கண்டதும் எதிரிக்கு வருவது...அதில்
எஞ்சியவர்களால் எமக்குள் விளைவது....
மனங்கள் சுமப்பது..ஆனால் விழிகள் பிரசவிப்பது..
நிம்மதியை இழக்கச்செய்யும் நீர்த்தேக்கம்...
துயரத்தின் உயர்வால் உடைபடும் அணைக்கட்டு..
கன்னியருக்கு கை வந்த கலை...அவர்தம்..
கவலையால் எழுப்பும் நீர்ச்சிலை.....
குற்றவாளிகள் இறுதியில் கற்க்கும் இடைவிடாகல்வி
மாறுவேடமிட்ட மற்றொரு குருதி..
இயலாதோர் கையேந்தி நிற்கையிலே...
இருப்போர் கை விரித்து சிரிக்கையிலே வருவது
இந்த """"""அழுகை""""""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (10-Feb-14, 11:30 pm)
சேர்த்தது : prakashna
பார்வை : 68

மேலே