குழந்தை தொழிலாளி

பயில மனமிருந்தும்
பையில பணமில்லை
படிப்பதற்க்கு

சுமைதாங்கும் பெற்றோர்
சுகவாசியாக வாழ
வாழ்விழக்கின்றோம் நாங்கள்

மைக்கறை படிய
வேண்டிய கரங்களில்
இரத்தகறை ஆனது
கல் சுமந்து

பாட சாலைக்கு
போகாதமையால் தினம்
நடக்கிறது பாடம்
எங்களுக்கு சாலையில்

நெய்தலிலும்
கானல் நீராக
எங்கள் கல்வி வாழ்க்கை

பள்ளியைக் கடக்கும்
போது மகிழ்கின்றோம் அது
நாங்கள் கட்டியதென்பதால் மட்டும்

ஆனாலும் பயின்றோம்
பள்ளிக்குச் செல்லாமல்
வறுமையை மட்டும்

விழி இருந்தும்
காணமுடியவில்லை
கல்வியை மட்டும்

தினமும் விடிகிறது
இருந்தும் தேடுகிறோம் விடியலை ......

எட்டாக்கனியாக எங்கள்
ஏட்டுக்கல்வி கிட்டுவது
எந்நாளோ ?

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (10-Feb-14, 11:27 pm)
பார்வை : 95

மேலே