ஏக்கமும் ஏளனமும்

என் மன வானத்தை
மின்னலும்.... இடியும்.......
நித்தம் நித்தம்
கிழித்துப் போடுகின்றன.
ஆறுதல் வேண்டி
நிலாவிடம் கை நீட்டினேன்
அமாவாசை என்று
இருட்டுக்குள் ஒளிந்து கொண்டது.
என் நிலை கண்டு
ஏளனமாய் சிரிக்கின்றன
நட்சத்திரங்கள்.

எழுதியவர் : (11-Feb-14, 4:37 pm)
பார்வை : 95

மேலே