உன் வசமே

வாழ்வில் முன் ஏற்றம்
காண ஏணிகளை
நம்ப வேண்டிய
அவசியமில்லை ,
ஏறு படிகள் உன் வசமிருந்தால் !
காரணமின்றி ஏதும்
நடப்பதில்லை !
எல்லாவற்றிலும் ஏதோவொன்று
மறைந்திருக்கிறது ..
ஆராய்ந்து பார் ,
அது உன்னுடைய
விடையாகக் கூடும்
மற்றவர்கள் மறந்த வேளையில்
உன்னை நீயே வெளிப்படுத்த !
பற்றில்லா வாழ்வு
பகற் கனவாகிவிடும்
சிறு துரும்பினையும்
பற்றிக்கொள் ..அது
உன் ஊர்தியாகக் கூடப்
பயன்படும் ஒருசில நேரங்களில் !
நொடிகளில் விழிப்பாய்
இரு ,மணித்துளிகளில்
மாற்றங்கள் நேருவதுண்டு !
மிகச் சிறந்த தொடக்கம்
முதன்மையான முடிவுக்கு
ஆரம்பமே !
முட்கள் இல்லாப் பாதையின்
தேர்வைவிட முள் அகற்றும்
வித்தையைக் கற்றுக்கொள்
எல்லாமே உன் வெற்றிப்
பாதையாய் சிறந்தோங்கும் !