எங்கே நிம்மதி
வறியவர்கில்லை பயமே!
வழியில் படுத்தாலும்
தூங்கிடும் மனமே !
வசதிகள் கொண்ட உனக்கோ !
உறக்கம் என்பதே பெரும்தவிப்பே !
வயிற்றில் வரிகள்
வறுமையின் நிலைகள்!
இருப்பதை உண்டு
களைப்பினை போக்கிடும்
ஏழைகள் எங்கே !
கிடைத்ததை சுருட்டி
தொப்பையை பெருக்கி
மருத்துவரிடம் உறக்கம் வேண்டி
தவமிருக்கும் செல்வந்தர் எங்கே !
பசியால் வரவில்லை உறக்கம்!
வறுமையின் தாக்கம்!
அரைவயிறு உண்டாலும்
மன சோர்வினை போக்கும்...!
பசியே வரவில்லை உனக்கு !
உணவே மருந்தென்பது மருவி
மருந்தே உணவாய் உண்டு
எதை நோக்கி உன்பயனம்....
விடியலிலும் விடியாத மனக்கணக்கு