அப்புவின் சந்தேகம்
"அம்மா"
"என்னடா"
"அம்மா .. ஏன் அப்பாவோட தலையிலே நிறைய முடி இல்லை"
"ஓ .. அதுவா .. உங்க அப்பா நிறைய யோசிப்பாரு .. அதனாலத் தான்".
"அப்படியா .. அம்மா .. இப்பொத்தான் தெரிஞ்சிது. நீ யோசிக்கவே மாட்டியாம்மா" ..
அப்புவின் இந்தக் கேள்வியை எதிர்பாராத தாய், என்ன செய்வதென்று திகைத்திருக்க, அருகில் படுத்திருந்த, தந்தை சிரித்தார். உடனே, அவள் சற்று சினத்துடன்,
"அப்பா தேவையில்லாமல் எதை எதையோ நினைத்து யோசிப்பாரு. நான் அப்படி இல்லையடா என் செல்லமே ! அதனாலத்தான் எனக்கு இன்னும் தலைமுடி கொழியவில்லை" என்றாள்.
= தொடரும் =