காதல் கடிதம்
ஏக்கமாய்
ஒரு கடிதம்
எழுதினேன் அவளுக்காக,
வார்த்தைகள்
அடம்பிடிப்பதையும்
மறக்காமல் எழுதினேன்,
கவிதைகள்
திருடியதையும்
சிறிதும் வெட்கமின்றி
எழுதினேன்,
முடிவில்...முடித்தேன்
என்னை வெறுப்பதாயிருந்தாலும்
அதை உன் வார்த்தையினால்
செல்லிவிடு என்று,
இன்றும்.....
அவளுக்காக
என் காத்திருப்புக்களே
என்னை கிறுக்கனாக
கிறுக்க சொல்கின்றன...!!!