ஆசைகள்
உன் மன வானில்
பிறைநிலவாய் உலவ ஆசை !
உன் வீட்டு தோட்டத்தில்
ஒற்றைரோசாவாய் மலர ஆசை !
உன் விரல்படும் தாளில்
கவிதையாய் பிறக்க ஆசை !
உன் சன்னல் கதவிடுக்கில்
ஒளிக்கற்றையாய் நுழைய ஆசை !
உன் சங்கு கழுத்தில்
முத்தாரமாய் தவழ ஆசை !
உன் காதல் தேசத்தில்
கரம்கோர்த்து நடக்க ஆசை !!