என் காதலை அறிவாயடா ---ப்ரியா

அறியாத ஒரு முகம் புதிதாக
அறிமுகமானது;
சில நாளில் பேசி தொடர்ந்த
அன்பில்;
அழகான ஒரு காதல்
ஆரம்பமானது!!!
தொலைவில் உன் முகம் தெரிந்தால்
என் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்!!!
அருகில் உன்னைப் பார்த்தால்
பறவையாய் ஆகாயத்தில்
பறக்கும் உணர்வு!!!
உன்னை பார்க்காத நாளில்
சிறைவாசம் கண்டன
என் விழிகள்!!!
உன் பேச்சில் என்னை இழந்த நான்
அதற்கு பதிலாக உன்
இதயத்தை கேட்க நினைத்தேன்.....
உன் கண்களில் என் காதலை
ரசித்த நான் உன்னை
முழுமையாய் அடைய வரம் கேட்டேன்.......
உன் புன்னகையில் என் முகத்தை
கண்ட நான்!
என் சுமைகளை இறக்கினேன்
என் சுமை தீரும் என்றல்ல;
தீர்ந்து விட்டதென்று....!
உன்னிடம் பேசாத இந்த சிலநாளில்
என் நினைவில் இருப்பதெல்லாம்
நீ என்னிடம் பேசிய வார்த்தைகள் மட்டுமே...!
என் கனவில் வருவதெல்லாம்
நீ பழகிய அந்த நினைவுகள் மட்டுமே...!
என் உயிர் காதலா!
என் ஏக்கங்களை புரிந்து கொள்வாயடா....!!!!!