என் சகோதரா

தொலை தூரம் கடந்து வந்த பாதையில் தேடிப்பார்க்கிறேன்-அவனை

தோழமையின் முழு உருவமாய் என்னை திகைக்க வைத்தவனை !

துன்பத்தில் தோள் கொடுத்து தூக்கியவனை !

துயரத்தில் துவண்ட போதெல்லாம் துயர் துடைத்தவனை !

நான் அயராது உழைத்த நாழியெல்லாம் துணை நின்றவனை !

என் முடிவுகள் எதுவாயினும் என்னோடு குரல் கொடுத்தவனை !

சில நேரங்களில் ஆச்சிரியங்களில் என்னை திகைக்க வைத்தவனை !

தோல்விகளால் உடைந்த போதெல்லாம் ஊக்கம் தந்தவனை !

வெற்றிகள் நான் சில கண்டிடவே வெகு நாட்கள் தவம் இருந்தவனை !

வேதனைகள் வேர் வரை சென்றாலும் விழுதுகளாய் என்னை தாங்கியவனை!

என் வாழ் நாள் முழுதும் நீ இன்றி சிறு துறும்பும் அசைந்ததில்லை - என் சகோதரா !!!
------------ ஹாசினி

எழுதியவர் : ஹாசினி(இந்து மதி ) (12-Feb-14, 4:15 pm)
பார்வை : 4320

மேலே