இந்து மதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இந்து மதி |
இடம் | : பாண்டிச்சேரி |
பிறந்த தேதி | : 14-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 383 |
புள்ளி | : 17 |
எனக்கு கவிதை மீது ஆர்வம்.அதை வெளி கொண்டு வரவே முயற்சி செய்கிறேன்.....
கரிச காடு கட்டி வச்ச
ஆத்தாளும் அப்பனும்!
கெடா வெட்டி சோறு போட்ட
மாமனும் மச்சானும்!
கல்லு முட்டி ஒடச்சு தந்த
சேக்காளி பயலுவளும்!
கல்யாண கிறுக்க ஏத்தி விட்ட
மாமன் பொண்ணும்!
கட்டாந்தரை கவி பாடும்
மயிலக் காளையும்!
கக்கத்துல வச்சு என்ன காத்து
வந்த அம்மாயி உன் நெனப்பும்
என்னை நித்தம் வந்து நெருடுதே!
ஆடு மாடு மேச்சா அப்பு!
அவமானமா போகுமுன்னா
என்ன ஒட்டகம் மேய்க்க
ஏத்தி விட்டீக???
ஆத்தா! பழைய கஞ்சி தின்னா
எம்புள்ள வெறுத்துடும்னா
காஞ்ச ரொட்டி திங்க
அனுப்பி வச்ச???
கடல் காத்துல கறுத்து
போவேன்னா! இந்த கத்தாரு
வெயிலு பக்கம்
வெரட்டி விட்டீக???
கைநாட்டு பய கண
ஏர் பிடிக்கும் கிழவனுக்கு ஏட்டெழுத்து தெரியலையே !
ஏன்னோ உழுதுண்டு உண்டவன்னுகு ஊனி நிக்க வழியில்லையே !
பச்ச வயலு கொஞ்சம் பாத்திடவே பட்டினி கெடக்குறேன் பல நாலு !
கால் வயிறு நிறப்பிடவே கால முழ்க்க கஷ்டப்படுறேன் !
ஏர்க்கலப்ப பிடிச்சவன் எவனும் எட்டிப்பிடிக்கல நிலவ !
என் சங்கதி எல்லாம் சிதஞ்சிடுமே சில காலத்துல !
சக்தி இல்ல இனிமே இந்த காலத்தோட மன்றாடிட !
அரசங்கம் தரும் அத்தியவசிய பொருளிலே !
பொங்கிடும் என் வீட்டுல கஞ்சி அன்றாடம் !
கோடிகளில் கொஞ்சம் ஊழல் செஞ்சவன் !
சொகுசா சுத்துறான் வெளியில !
பிஞ்சு நெல்லு எல்லாம் பாழா போச்சோ !
இந்த தண்ணி பஞ்சத்தால !
வெட்ட வெளி வ
நட்சத்திரங்கள் தலைமையேற்கின்றன
தலைவன் நிலவின்
விடுப்பு நாட்களில்..
ஏர் பிடிக்கும் கிழவனுக்கு ஏட்டெழுத்து தெரியலையே !
ஏன்னோ உழுதுண்டு உண்டவன்னுகு ஊனி நிக்க வழியில்லையே !
பச்ச வயலு கொஞ்சம் பாத்திடவே பட்டினி கெடக்குறேன் பல நாலு !
கால் வயிறு நிறப்பிடவே கால முழ்க்க கஷ்டப்படுறேன் !
ஏர்க்கலப்ப பிடிச்சவன் எவனும் எட்டிப்பிடிக்கல நிலவ !
என் சங்கதி எல்லாம் சிதஞ்சிடுமே சில காலத்துல !
சக்தி இல்ல இனிமே இந்த காலத்தோட மன்றாடிட !
அரசங்கம் தரும் அத்தியவசிய பொருளிலே !
பொங்கிடும் என் வீட்டுல கஞ்சி அன்றாடம் !
கோடிகளில் கொஞ்சம் ஊழல் செஞ்சவன் !
சொகுசா சுத்துறான் வெளியில !
பிஞ்சு நெல்லு எல்லாம் பாழா போச்சோ !
இந்த தண்ணி பஞ்சத்தால !
வெட்ட வெளி வ
கடல் கடந்துச் செல்கிறேன் –கண்னே
உன் சீலை வாசம் பிரிந்து போகிறேன் !
தினம் தினம் கண் விழிக்கையில் கண் முன்
நின்று குளிர வைப்பாயே-பெண்ணே
கடல் கடந்துச் செல்கிறேன்-கலையிழந்து
போகுதடி என் கண்கள்-தினமும்
உன்னை காணாமல் - கவிச்சுடரே
கண் மூடி திறப்பதர்க்குள் காலம் கடந்து
போக ஆசைப்படுகிறேன்-கண்மணியே
உன் கடைக்கண் பார்வையில் தினம் தினம்
நான் விழுந்தெழவே
-ஹாசினி
மாற்றங்கள் எத்தனை மன மாற்றங்கள் எத்தனை !
அதில் தடுமாற்றங்கள் எத்தனை !
அதை ஏற்றுக்கொள்ளத்தான் மனங்கள் எத்தனை !
மீண்டும் அதை திரும்பி பார்க்க தூண்டும் நினைவுகள் எத்தனை !
மாற்றத்தால் கிடைக்கும் இன்பங்கள் எத்தனை !
அதனால் ஏற்படும் துன்பங்கள் எத்தனை !
இழப்புகள் எத்தனை நெஞ்ச தவிப்புகள் எத்தனை !
இதனால் மாற்றம் வேண்டுமா என என்னும் நெஞ்சங்கள் எத்தனை !
எத்தனையோ மாற்றங்கள் இருப்பினும் !
நீ என் மேல் கொண்டுள்ள பாசம் எத்தனை ?
கணக்கிட முடியவில்லை என் காதலால் !
-ஹாசினி
தொலை தூரம் கடந்து வந்த பாதையில் தேடிப்பார்க்கிறேன்-அவனை
தோழமையின் முழு உருவமாய் என்னை திகைக்க வைத்தவனை !
துன்பத்தில் தோள் கொடுத்து தூக்கியவனை !
துயரத்தில் துவண்ட போதெல்லாம் துயர் துடைத்தவனை !
நான் அயராது உழைத்த நாழியெல்லாம் துணை நின்றவனை !
என் முடிவுகள் எதுவாயினும் என்னோடு குரல் கொடுத்தவனை !
சில நேரங்களில் ஆச்சிரியங்களில் என்னை திகைக்க வைத்தவனை !
தோல்விகளால் உடைந்த போதெல்லாம் ஊக்கம் தந்தவனை !
வெற்றிகள் நான் சில கண்டிடவே வெகு நாட்கள் தவம் இருந்தவனை !
வேதனைகள் வேர் வரை சென்றாலும் விழுதுகளாய் என்னை தாங்கியவனை!
என் வாழ் நாள் முழுதும் நீ இன்றி சிறு துறும்பும் அசைந்ததில்
பழகின நட்பு மறந்து போனதோ ! -நண்பா
நம் நினைவுகள் அத்தனையும் பறந்து போனதோ !
புதிய நட்பு புத்துணர்ச்சி தந்ததோ !-நண்பா
புதிய இன்பம் தந்ததோ !
பழைய நட்பு கசந்து போனதோ ! -நண்பா
அது களைத்து போனதோ !
இமை மூடிப் பாரட என் உண்மை நட்பு புரியும்
உன் உள்ளத்துக்கு
தினம் தினம் மாறி மறையதடா என் நட்பு ! நான் மயானம் செல்லும் வரை !
- ஹாசினி
அடியோடு என்னை நீவிர் வெட்டி சாய்த்தாலும் !
துளிர் விடுவேன் ஆணிவேரிலிருந்தவது ! !
ஊக்கம் என்னும் மழை துளி என்னுள் இருப்பதனால் ! !
- ஹாசினி