மாற்றங்கள்
மாற்றங்கள் எத்தனை மன மாற்றங்கள் எத்தனை !
அதில் தடுமாற்றங்கள் எத்தனை !
அதை ஏற்றுக்கொள்ளத்தான் மனங்கள் எத்தனை !
மீண்டும் அதை திரும்பி பார்க்க தூண்டும் நினைவுகள் எத்தனை !
மாற்றத்தால் கிடைக்கும் இன்பங்கள் எத்தனை !
அதனால் ஏற்படும் துன்பங்கள் எத்தனை !
இழப்புகள் எத்தனை நெஞ்ச தவிப்புகள் எத்தனை !
இதனால் மாற்றம் வேண்டுமா என என்னும் நெஞ்சங்கள் எத்தனை !
எத்தனையோ மாற்றங்கள் இருப்பினும் !
நீ என் மேல் கொண்டுள்ள பாசம் எத்தனை ?
கணக்கிட முடியவில்லை என் காதலால் !
-ஹாசினி