2 குழந்தை தொழிலார்கள்

அவள் உடம்பில் இருக்கும் அத்தனை தழும்புகள் சொல்லிடுமே !

அவள் நரகத்தில் கழித்த நாட்களின் எண்ணிக்கையை !

பேச்வலிமை இழந்த இதழ்கள் கெஞ்சிடுதே பள்ளிக்கூடம் சென்றிடவே !

ஏட்டை திருப்ப மறந்தாயே நி எச்சிலை கழுவ ஆசைபட்டாயே !

ஜான் வயிரை நிரப்பவே நீ ஜென்மம் முழுக்க உழைக்கிறாய் !

மேகம் கூட உனக்காக வருந்திடுமோ –கண்ணம்மா
அதுவும் சில நாட்கள் சொல்லிடுதே மழையின் மூலம் தன் சோகத்தை !

சூரியனையும் கோபிக்கிறேன் நான் சில நேரங்களில் !

சிறமப்படுத்துது உன்னை சுட்டெரிக்கும் வெப்பத்தால் !

பெற்றெடுத்தவளுக்கு பெருமை சேர்க்க நினைக்கிறாயோ !-கண்னே
உழைத்து உழைத்து ஒடாய் தேய்ந்தே !

உந்தன் கண்களில் தெரியும் ஆயிரம் கேள்விகளுக்கு
இல்லையம்மா என்னிடம் பதில் !

காலம் சொல்லிடும் பதிலுக்காக காத்துக் கிடக்கும் கண்மணியின் குரல் ! ! !
--ஹாசினி

எழுதியவர் : ஹாசினி (30-Mar-14, 11:33 am)
சேர்த்தது : இந்து மதி
பார்வை : 1676

மேலே