போறாளே ஒரு பொண்ணு

தலையிலே விறகு கட்டு
தலைப்பாகை இறுக்கி கட்டி
நெற்றியிலே வியர்வை முத்து
தள்ளாடி போறாளே ஒரு பொண்ணு

வெளியிலே வெப்பக் காற்று
தேகம் சுடும் கதிரவன் கீற்று
பாதை எங்கும் நெறிஞ்சி முள்ளு
பாதணியற்று பயணம் போகும்
அவள் பாதம் இரண்டு

பிறப்பில் தேகம் செக்கச்சிவப்பு
கட்டியவன் மனமோ கருப்பு விளக்கு
அவள் மேல் கொண்டான் மனதால் வெறுப்பு
விரைவாய் வந்தது அவனது இறப்பு

உலகில் வாழ உணவு வேண்டும்
உறவுகள் அற்றால் உணர்வே சாகும்
தனிமரம் ஆனாலும் தன் மானம் பார்க்கும்
கற்பை காத்து பெண்ணின் பெருமையை காக்கும்

அவள் இவள்தான்
போறாளே ஒரு பொண்ணு .....

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (30-Mar-14, 11:24 am)
சேர்த்தது : nuskymim
பார்வை : 154

மேலே