ஏர்ப்பிடிக்கும் கிழவன்
ஏர் பிடிக்கும் கிழவனுக்கு ஏட்டெழுத்து தெரியலையே !
ஏன்னோ உழுதுண்டு உண்டவன்னுகு ஊனி நிக்க வழியில்லையே !
பச்ச வயலு கொஞ்சம் பாத்திடவே பட்டினி கெடக்குறேன் பல நாலு !
கால் வயிறு நிறப்பிடவே கால முழ்க்க கஷ்டப்படுறேன் !
ஏர்க்கலப்ப பிடிச்சவன் எவனும் எட்டிப்பிடிக்கல நிலவ !
என் சங்கதி எல்லாம் சிதஞ்சிடுமே சில காலத்துல !
சக்தி இல்ல இனிமே இந்த காலத்தோட மன்றாடிட !
அரசங்கம் தரும் அத்தியவசிய பொருளிலே !
பொங்கிடும் என் வீட்டுல கஞ்சி அன்றாடம் !
கோடிகளில் கொஞ்சம் ஊழல் செஞ்சவன் !
சொகுசா சுத்துறான் வெளியில !
பிஞ்சு நெல்லு எல்லாம் பாழா போச்சோ !
இந்த தண்ணி பஞ்சத்தால !
வெட்ட வெளி வானமும் கொஞ்சம் !
வேதனைய தருது மழையில்லாம !
மானம் கெட்டு வாழ பழகிக்கல நானு !
அதனால மாய்ச்சுக நெனைக்கிறேன் என்னை !
மன்றாடி கேட்கிறேன் இந்த உலகத்திடம் !
மிச்சம் வையுங்க கொஞ்சம் நிலத்த பயிர் செஞ்சு கொஞ்சம் பொழைக்க ! ! ! !
-ஹாசினி