பழைய நட்பு
பழகின நட்பு மறந்து போனதோ ! -நண்பா
நம் நினைவுகள் அத்தனையும் பறந்து போனதோ !
புதிய நட்பு புத்துணர்ச்சி தந்ததோ !-நண்பா
புதிய இன்பம் தந்ததோ !
பழைய நட்பு கசந்து போனதோ ! -நண்பா
அது களைத்து போனதோ !
இமை மூடிப் பாரட என் உண்மை நட்பு புரியும்
உன் உள்ளத்துக்கு
தினம் தினம் மாறி மறையதடா என் நட்பு ! நான் மயானம் செல்லும் வரை !
- ஹாசினி