நட்பூ

உற்றுழி உதவும் உணமைத் தோழியாய்
உன்னோடும் ஊணோடும்
உயிர்பெற்று கலந்திருந்தேன்
ஒளிவு மறைவு
ஏதுமில்லா நம் நட்பில்....
என்னுள் மலர்ந்தது
ஒரு கேள்வி
புரிந்து கொண்ட நண்பனை
பிரிந்து செல்ல நேருமோ?
வழி துணை வருபவன்
வாழ்கை துணையானால்....
விதிர் விதிர்த்து போனேன்
குழம்பி, குழப்பி,குமைந்தேன்...
மெல்ல தெளிந்தேன்
இவனைவிட சிறந்த கணவன் கிடைப்பினும்
இவனை விட சிறந்த நண்பன் கிடைப்பானா?
நண்பனை கணவனாக்கி
நட்பை கொல்வானேன்...
நட்பு நட்பூவாகவே இருக்கட்டுமே!

எழுதியவர் : சித்ரா ராஜ் (12-Feb-14, 4:25 pm)
பார்வை : 236

மேலே