கடல் கடந்துச் செல்கிறேன்

கடல் கடந்துச் செல்கிறேன் –கண்னே
உன் சீலை வாசம் பிரிந்து போகிறேன் !
தினம் தினம் கண் விழிக்கையில் கண் முன்
நின்று குளிர வைப்பாயே-பெண்ணே
கடல் கடந்துச் செல்கிறேன்-கலையிழந்து
போகுதடி என் கண்கள்-தினமும்
உன்னை காணாமல் - கவிச்சுடரே
கண் மூடி திறப்பதர்க்குள் காலம் கடந்து
போக ஆசைப்படுகிறேன்-கண்மணியே
உன் கடைக்கண் பார்வையில் தினம் தினம்
நான் விழுந்தெழவே
-ஹாசினி