+கண்பேசி காதல்+

தொலைபேசி பேசி பேசி
தொலைந்த காதல் பல கண்டேன்
அலைபேசி பேசி பேசி
அலைந்த காதல் சில கண்டேன்

கண்பேசி பற்றிக்கொண்ட காதல் கண்டேன்
உன்னிடம் உன்னிடம் உன்னிடமே!
என்னைநான் தெரியாமல் தொலைத்து நின்றேன்
கண்ணிடம் கண்ணிடம் கண்ணிடமே!


கண்ணுக்கொரு மொழியை நீயும்
கற்றுக் கொண்டது எப்படியோ..!
மண்ணில் பிறந்த எந்தன் கண்ணில்
பற்றிக் கொண்டது தீயடியோ..!
முன்னில் நிற்க முடியவில்லை
பின்னில் நிற்க தெரியவில்லை
என்னில் எழுந்த வானவில்லே
இரவில்கூட நீ மறையவில்லை..!

மௌனம்பேசிடும் உந்தன் மொழி
இனித்திடக் கண்டேன் நானடியோ..
என்னை மயக்கிடும் மௌனமொழி
தமிழின் அன்றைய நாலடியோ..
கண்ணால் தினமும் வதம்செய்தாய்
பார்வை இருட்டிடும் ஒளிதந்தாய்
மனதில் உதித்தே சூரியனாய்
காதல் செடியொன்று துளிர்க்கவைத்தாய்..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Mar-14, 9:39 am)
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே