MONEYதம்

“அறம் செய்ய விரும்புகிறார்கள்”
80 G DEDUCTION க்காக மட்டும்...

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
TWENTY 20 இல் மட்டும்...

வள்ளாரின் “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்”
இன்று வாடிய FIGURE ஆகி விட்டது...

FIXED DEPOSIT
செய்யும் பொழுது மட்டுமே,
தாத்தா பாட்டியின்
ஞாபகம் வருகிறது...

போதும் போதும்...
இன்னும் எத்தனை எத்தனை...
பட்டம் வென்றோம்...
பல் கலை கற்றோம்...
பார் வியக்கும் புகழும் பெற்றோம்...
ஆசை வென்றோம்..
அகிலம் வென்றோம்...
மனிதம் மட்டும்
யேனோ தோற்றே பொறோம் ???

எழுதியவர் : காவியன்... (12-Feb-14, 11:21 pm)
பார்வை : 101

மேலே