இன்பத் தேன் வந்து பாயுது மனதினிலே

நிமிர்ந்து இரு என்றது பார்த்த போது வானம்
பணிந்து இரு என்றது பார்த்த போது பள்ளம்
சிரித்து இரு என்றது பார்த்த போது மலரும்
இனித்து இரு என்றது கேட்ட போது தமிழும்

தனித்து இரு என்றது பார்த்தபோது தவமும்
மதித்து இரு என்றது பார்த்தபோது மனிதம்
தவித்து இரு என்றது பார்த்த போது மனதும்
மகிழ்ந்து இரு என்றது படித்தபோது தமிழும்

விழியும் செவியும் இல்லாவிடிலும்
விளங்கும் இனிமை தமிழால் துலங்கும்
வியப்பு என்பது இதில் ஒன்றும் இல்லை
விபரம் அறிய அம்மகிழ்ந்த திறனாளிகளிடம் கேளீர்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Feb-14, 6:18 am)
பார்வை : 85

மேலே