ஒருமுறைதான் இந்த வாழ்க்கை
இன்றைய வாழ்வை
இக்கணமே தொடங்கு ....
நேற்று நீ வாழ்ந்தாய்
என்பதற்கு நாளைய
வரலாற்றில் நீ இருப்பாயா?
ஒவ்வொருகணமும் நீ
சிந்தித்துக்கொண்டு இரு,
வரலாற்று சுவற்றில் உன்பெயரும்
பொறிக்கப்படவேண்டும்,
பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்
என்பது மற்ற ஜீவராசிகளுக்கு
உரியது...........
இவைகளுக்கு மேல் நீ மகத்தானவன்
என்று உணரு ..
ஒவ்வொருகணமும் நீ சாதனையாளன்
என்ற நம்பிக்கை வித்தை விதை ....
உனக்காக வாழாவிட்டாலும்
நாளைய சந்ததியருக்காக
நீ வாழ வேண்டும் ,
கோழையைப்போல் நீ கூனி குறுகாதே,
உன்னதமான மாமனிதன் என்று
நீ உணரு ...
நீ உண்டு ஊனை வளர்த்தாலும்
உன் அறிவைப்பெறுக்கி இந்த
இவ்வுலகை வெல்லடா .
நாளைய வரலாற்றில் உன் பக்கமும்
திறக்கப்படவேண்டும் அதற்க்கு இன்றைய
பொழுதே உன்னை ஆயத்தபடுத்திக்கொள்
ஒருமுறைதான் இந்த வாழ்க்கை
நாளைய தலைமுறைக்கு
நீ வழிகாட்டி என்பதை மறவாதே !
சிந்தித்துப்பார் .........
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த