மரியாதையைக் காப்பாற்று
மரியாதையைக் காப்பாற்று
***************************************
மருமகன் மாமியார் வீட்டிற்கு
வந்தான். ஏகத்தடபுடகலான வரவேற்பு.
அசைவ, சைவ உணவு வகைகள் என்று
மாமியார் மருமகனை அசத்திவிட்டார்.
மருமகனுகோ மட்டற்ற மகிழ்ச்சி.
மாமியாரைப் பாராட்ட நினைத்தன்.
ஆனாலும் நேரடியாகப் பாராட்ட வெட்கம்.
எனவே, அன்று இரவு ஒரு
கரித்துண்டால் சுவரில் இப்படி எழுதினான்.
"மாமியார் வீடு சொர்க்கம்" . .
மறுநாள் காலையில் எழுந்த
மருமகன் சுவரைக் கண்டு திடுக்கிட்டான்.
தான் எழுதியிருந்த வாசகத்திங்கீழ்
இப்படி எழுதியிருந்தது.
"மாமியார் வீடு சொர்க்கம்"
"மூன்று நாள்கள் மட்டும்
தங்கியிருந்தால்."
துண்டைக் காணோம், துணியைக் காணோம்
சொல்லாமலேயே புறப்பட்டுப் போய்விட்டான்.
******************************************************************