காதல் விண்ணப்பம்
காதலர் தினம் - என் காதல் சொல்ல ஒரு தருணம்.
உன் வருகைக்காக காத்திருக்கும்
என் விழிகள்
நி வந்ததும் என் காதல் சொல்ல
துடிக்கும் இதழ்கள்
ஆனால் உன் முகம் பார்த்ததும் மறந்து விடலாம்
எனது மனபாட வார்த்தைகள்
மறந்து விட்டாலும் நி புரிந்து கொள்வாய்
என என் நம்பிக்கைகள்
உடலில் பதட்டம் இருந்தாலும் இன்னும்
என் கையில் கசங்கா பூக்கள்
ஏ பெண்ணே மலரை பெற்று கொண்டு
உன் மனதை கொடு
மரணம் வரை பாதுகாப்பேன் - நம் காதல்.