காதல் என் காதல்

மழையே என் மழையே என் நிழல் உன்னைத் தேட
வெயிலே என் வெயிலே என் நிலவுன்னைத் தேட...

கரையை நான் தொடுவேன் அடி உன்னோடு வாழ
கானல் நீரானேன் அடி நீயின்றி வாழ...

உன் பார்வை எனைப் பார்க்க நான் தவம் கொண்டு வாழ்வேன்
உன் நிழலும் எனைப் பிரிய அடி நிஜமின்றி போவேன்...

காதல் என் காதல் அடி உன்னோடு சேர
காலம் அந்த காலம் அடி வானோடு போக...

மண்ணை நான் தொட்டேன் அடி உன் பாதம் பார்க்க
உன் பாதம் போக நான் கண்ணீராய் பேச...

கண்ணே என் கண்ணே இரு விழி உன்னைத் தேட
அன்பே உன்னைக் கண்டால் அது உயிர்பெற்று வாழ...

வழியே என் வழியே காற்றுன்னை தேட
உன் விரல்கள் அது தொட்டால் அது உருபெற்று வாழ...

சுவாசம் என் சுவாசம் அட நீயாகி போக
பூங்காற்றும் வாசம் கொள்ளும் உன் சுவாசத்தால்...

மௌனம் என் மௌனம் அடி இசையாகிப் போக
வார்த்தை என் வார்த்தை உன் நினைவோடு வாழ...

குயிலும் அந்த குயிலும் உன் குரல் தேடி ஏங்க
குரலும் என் குரலும் அடி உனைத்தேடி வாழ....

எழுதியவர் : மதுராதேவி (13-Feb-14, 10:15 pm)
Tanglish : kaadhal en kaadhal
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே