காதலியுங்கள்

காதலியுங்கள்
உங்கள் காதலை

காதலை
தடக்கும் தடைகற்களை
தகர்பீராயின் காதலியுங்கள்

எரிமலை குழாம்பாய்
எரித்திடும் குடும்பம்
எதிர்பீராயின் காதலியுங்கள்

சாதிய தீயில்
எரிக்கபடலாம் காதல்
பினிக்ஸ் பறவையாய்
பறப்பிராயின் காதலியுங்கள்

காட்டாற்று வெள்ளமாய்
பொருளாதராம் இழுத்து செல்லும்
எதிர்த்து நிந்துவாரயீன் காதலியுங்கள்

காதலிக்கும் வேளையில்
நானே பெரியோன்
எண்ணம் தூக்கும்
சமநிலை தெரியுமாயின் காதலியுங்கள்

எதிர்ப்புகள் கைதட்டி
வரவேற்கும்
எதிர்க்கும் துணிவை
கொண்டவராயின் காதலியுங்கள்

வெள்ளி பணத்திற்க்காய்
யுதாசுகளால் விற்க்கபடலாம்
சிலுவை சுமந்தேனும்
காதலியுங்கள்

காதலியுங்கள்
கரம் பற்றிடுங்கள்

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (14-Feb-14, 9:29 am)
பார்வை : 139

மேலே