வறுமையின் பிறப்பிடம் எது

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (15-Feb-14, 4:40 pm)
பார்வை : 843

மேலே