மனிதம்
கிழிக்கப்பட்ட முக வாய்
உடைந்து சிதறிய
உதிர வாடை
மௌன போராட்டம்
நடத்தும் மனம்
தூக்கி எறியப்பட்ட
உடல்
போலியான உலகின்
பிம்பங்கள் போட்டுக் கொள்ளும்
போட்டியில்
'தான்' என்ற
மமதை
உயர்ந்து நிற்க
சரிந்து செல்கிறது
மனிதம்!

